செவ்வாழையில் உள்ள நன்மைகள் !!

by Lifestyle Editor

செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது.இது உங்கள் உடலிற்குமுக்கிய தேவையான கரையும் நார்ச்சத்து ஆகும். நார்ச்சத்து தினமும் தேவையான அளவு எடுத்து வந்தால் உங்களுக்கு மலசிக்கல், செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

செவ்வாழையில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உங்களுக்கு சிறுநீரக கற்கள், இரத்த அழுத்தம்,இருதய நோய், புற்று நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

தினமும் ஒரு செவ்வாழை பழம் உண்டு வருபவர்களுக்கு இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினை வராமல் தடுக்கும். நமது சருமம், முடி, மூட்டு மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஒரு செவ்வாயில் தினமும் தேவையான அளவில் 16% வைட்டமின் சி நிறைந்துள்ளது.

செவ்வாழையில் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை, இரத்த குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

செவ்வாழையில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது.இதனை நீங்கள் உண்டுவந்தால் உங்களின் கண் ஆரோக்கியம்மேம்படும். மேலும் உங்களுக்கு பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்பார்வை திறனை அதிகரிக்கும்.

உடல் எடை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையினை அதிகரிக்க விரும்புவார்கள் தினமும் இரண்டு செவ்வாழை பழத்தினை உண்டு வரலாம்.

Related Posts

Leave a Comment