குஷ்பூ கொடுத்த அட்வைஸ் – அடைமழையானாலும் இதை மறந்திடாதிங்க

by Column Editor

தனது ஒர்கவுட் போட்டோவுடன் மாதத்தின் முதல் நாளில் ரசிகர்களுக்கு அட்வைஸுடன் கூடிய வாழ்த்துகளை நடிகை குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

தனது வசீகர தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 90’s கனவு கன்னியான குஷ்பூவிற்கு கோவில் கட்டி கொண்டாடிய ரசிகர் பட்டாளம் உண்டு. வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னிய குஷ்பூ, தற்போது பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர், தீபாவளி வரவான அண்ணாத்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனது ஆதிக்கத்தை நிரப்புவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தனது உடல் எடையில் கவனம் செலுத்தி மீண்டும் 90’S நாயகியாக உருமாறியுள்ள குஷ்பூ, அவ்வப்போது தனது ஸ்லிம் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று தனது ஒர்கவுட் புகைப்படத்தை பதிவிட்டுள்ள குஷ்பூ ;

“மழையோ, ஆலங்கட்டி மழையோ எதுவாக இருந்தாலும். உங்கள் ஒர்கவுட்டைத் தவிர்ப்பதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டாம். சரிவிகித உணவை உண்ணுங்கள், உங்கள் வரம்புகளை மீறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள். ஒரு புதிய அழகான உங்களுக்கு வணக்கம் சொல்லுங்கள். ”
இவ்வாறு பதிவிட்டுள்ளார் .

Related Posts

Leave a Comment