என்னால் என் குடும்பத்துக்கு நிறைய தொல்லை:ஷாருக்கான்

by Column Editor

தான் பெரிய நடிகராக இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் நிறைய தேவையில்லாத தொல்லைகள் ஏற்படுவதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஷாருக்கானை பார்க்கும் ஆசையில் அவரின் பங்களாவான மன்னத் முன்பு ரசிகர்கள் கூடினார்கள். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதனிடையே நடிகர் ஷாருக்கான் 2017 ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. அதில் தன் குடும்பம் பற்றி பேசியுள்ள அவர், கௌரிக்கு 14 வயது இருந்தபோதே அவரை எனக்கு தெரியும். அதனால் தற்போது அவரை 35 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும்.

ஒரு நடிகருடன் சேர்ந்து வாழ்வது கடினம். நான் இந்த உலகத்திற்கு சொந்தம். என்னுடன் சேர்ந்து வெளியே சென்றால் என்னை பார்க்க காத்திருப்பவர்களை எதிர்கொள்ள வேண்டும். தேவையில்லாத பல தொல்லைகளை நான் குடும்ப வாழ்க்கையில் கொண்டு வருகிறேன்.என் குடும்பத்தாரை கிண்டல் செய்கிறார்கள். அவர்களின் பிரைவசி பறிக்கப்படுகிறது. என்னால் சாதாரணமாக வாக்கிங் கூட செல்ல முடியாது.

சில சமயம் என் குடும்பத்தை பற்றி மோசமாக பேசப்படும்போது அதற்கு நான் பொறுப்பாக உணர்கிறேன். என்னால் ஏற்படும் தொல்லைகளை பொறுத்துக் கொள்ளும் கௌரியை நான் மதிக்கிறேன். கௌரி இல்லாமல் நான் இல்லை என்றார். இந்நிலையில் போதை வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் ஆர்யன் வீடு திரும்பியதால் அவர்களின் வீடு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

Related Posts

Leave a Comment