222
			
				            
							                    
							        
    TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, பெப்ரவரி முதலாம் திகதி முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
