‘ஜெய் பீம்’ நிஜ கதாநாயகன் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை சினிமா இயக்குநர்கள் நேரில் பாராட்டி கெளரவிப்பு

by Column Editor

‘ஜெய் பீம்’ படத்தின் நிஜ நாயகர் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் நேரில் சந்தித்து பாராட்டி கெளரவித்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஜெய் பீம்’. இப்படம் கடந்த 2ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு.

இவர், 1993ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையால் அடித்து கொலை செய்யப்பட்டார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே வழக்கு உயர்நீதிமன்றம் சென்றது. இருளர் – பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பதும் பிறகு விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் எடுத்து நடத்திய இந்த வழக்குதான் ‘ஜெய் பீம்’ படமாக உருவாகி மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் ஓய்வுபெற்ற நிதிபதி சந்துருவை நேரில் சந்தித்து கெளரவித்திருக்கிறார்கள். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், பிரபுதேவா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து சந்துருவின் ஓவியத்தை பரிசளித்துள்ளனர். அவருடன் இயக்குநர் தா.செ ஞானவேலும் உடனிருந்து வாழ்த்துகளைப் பெற்றார். இப்புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment