இன்றைய ராசி பலன் – மார்ச் 26, 2024

by Lifestyle Editor

மேஷம்:

தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்றைய நாள் உங்களுக்கு செல்லும். வணிகர்கள் இன்று பண நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் தரப்பிலிருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

வணிகர்கள் தங்களது வியாபாரம் தொடர்பாக இன்று பயணம் செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்களின் எந்த ஒரு தடைப்பட்ட வேலைகளையும் உங்கள் நண்பரின் உதவியுடன் முடிப்பீர்கள், இதை கொண்டாட பார்ட்டி மனநிலையில் இருப்பீர்கள். இன்று உங்கள் குடும்ப செல்வம் பெருகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் சாதகமாக உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வேலைகள் அனைத்தும் இன்று முடிவடையும்.உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்களின் பேச்சு மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

கடகம்:

உங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் அதிகமாக இன்று பணம் செலவழிப்பீர்கள். அதே நேரம் உங்கள் வருமானம் மற்றும் செலவு இரண்டிலும் சமநிலையை பேண முக்கியத்துவம் கொடுங்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்த பணம் உஙக்ளுக்கு இன்று கிடைக்கும்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படலாம். வணிகர்கள் தொழிலில் புதிய உத்வேகம் பெற சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் பழைய முதலீடுகள் மூலமாக பலன் பெறுவீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிச்சயம் கைகொடுக்கும். காலையில் இருந்தே நல்ல செய்திகளைக் கேட்கலாம், இது ஆற்றலுடன் இருக்க உதவும். பணியிடத்தில் உங்களுக்கான மரியாதை கூடும். எனினும் அரசு வேலையில் இருப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்:

பண விஷயத்தை பொறுத்த வரை இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலை குறையும். இன்று உங்கள் ஆடம்பரத்திற்காக கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.

விருச்சிகம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கலாம், ஆனால் கடின உழைப்பால் மாலைக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து விட முடியும். எந்த ஒரு தொழிலையும் கூட்டாகச் செய்தால், அதிலும் லாபம் கிடைக்கும்.

தனுசு:

வியாபாரிகள் இன்று தங்கள் வணிகத்திற்காக கடன் வாங்க விரும்பினால், அதைத் திரும்பப் செலுத்துவது கடினமாக இருக்கும் என்பதால் கவனமுடன் முடிவெடுக்க வேண்டும் சகோதரரின் அறிவுரையால் இன்று முக்கிய சிக்கலில் இருந்தும் விடுபடுவீர்கள்.

மகரம்:

இன்று புதிதாக தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விடா முயற்சியுடன் உழைத்தால் உங்கள் வேலைகள் அனைத்தும் சரியாக முடிவடையும். முடிவெடுக்கும் முன் ஆலோசனை தேவைப்பட்டால், அனுபவமுள்ள ஒருவரை அணுகவும்.

கும்பம்:

இன்று நீங்கள் ஏதேனும் முக்கிய விஷயத்தில் ஏதேனும் ரிஸ்க் எடுக்க நேரிட்டால், தைரியமாக எடுக்கலாம், அது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் நிதி நிலை இன்று வலுவாக இருக்கும். ஆனால் இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், அப்படி கொடுத்தால் அந்த பணம் கிடைக்காமல் போகலாம்.

மீனம்:

இன்று உங்கள் எதிரிகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் உங்களுக்கு தொல்லை கொடுக்க முயற்சி செய்வார்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் இன்று உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்ப விஷயங்களில் உங்கள் தந்தையின் ஆலோசனை தேவைப்படும்.

Related Posts

Leave a Comment