வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..

by Lifestyle Editor

பொதுவாக கோடை காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நீர் சத்து நிறைந்ததாகவும், குளிர்ச்சியானதாகவும் இருப்பது முக்கியமானது. கோடை காலத்தில் நம் உடல் எளிதில் வறட்சி அடையும் என்பதால் உடலில் நீர் சத்து இல்லாமல் மிகவும் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றோம். இவ்வாறு பாதிப்புகள் ஏற்படாமல் தவிப்பதற்கு நீச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக கோடைகாலத்தில் விலை மலிவாகவும், அதிகமாகவும் கிடைக்கும் வெள்ளரிக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றது. வெள்ளரிக்காயில் நீர் சத்து நிறைந்துள்ளதால் இது சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து அதிகப்படியாக கிடைக்கிறது.

மேலும் கணையத்தில் இன்சுலின் சுரக்கும் ஹார்மோனை அதிகப்படுத்தும் பண்புகளைக் கொண்டது வெள்ளரிக்காய். எனவே சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் இன்சுலின் அதிக அளவு சுரந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் உடலில் செரிமான வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

இது மட்டுமல்லாது உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடுவதன் மூலம் எளிதாக உடல் எடை குறையலாம். இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அமிலங்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள சிலிகா, சல்பர் போன்ற அமிலங்கள் நகம், முடி, சதை போன்றவற்றின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. மேலும் முடியை நீளமாக வளரவும் செய்கிறது. இவ்வாறு கோடகாலத்தில் எளிதாக கிடைக்கும் வெள்ளரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

Related Posts

Leave a Comment