கீரை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!!

by Lifestyle Editor

அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். கண்களில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சிறுக் கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும்.

கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும். பசலைக் கீரை அதிக சுவையை உடையது. அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நா வறட்சியை தீர்க்கும்.

பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக் கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

Related Posts

Leave a Comment