68
பிரதமர் மோடி கடந்த சில மாதங்களில் அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் வருகை தர உள்ளார்.
பிப்ரவரி 27ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபின், 28ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 27:
மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்.