65
உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் 60 மாவட்டங்களில் இந்த வளர்ச்சித் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இதன்மூலம் 34 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.