வாழைப்பழத்தை இந்த 3 உணவோடும் சேர்த்து சாப்பிடவே கூடாதாம்…

by Lifestyle Editor

வாழைப்பழத்தை ஊட்டச்சத்துக்களின் பவர்ஹவுஸ் என்று சொல்வார்கள்.

வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதுதவிர வைட்டமின் சி, புரதம் மற்றும் நிறைய மினரல்களும் இருக்கின்றன.

வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிடும்போது ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவி செய்யும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வாழைப்பழத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.

ஜீரண செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முட்டை, இறைச்சி :

முட்டை, மீன் மற்றும் மற்ற இறைச்சி வகைகள் எடுத்துக் கொள்ளும்போது அதோடு சேர்த்து வாழைப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் தாவர அடிப்படையிலான உணவுகளைக் காட்டிலும் அசைவ புரத உணவுகளுடன் வாழைப்பழத்தை சேர்ப்பது நல்லதல்ல. அப்படி உயர் புரதங்களுடன் வாழைப்பழத்தைச் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது இது ஜீரண மண்டலங்களில் வாய்வை உற்பத்தி செய்யும். அசிடிட்டியை உண்டாக்கலாம். சிலருக்கு கடும் வயிற்று வலியைக் கூட ஏற்படுத்தும்.

​இனிப்பு வகைகள் :

ஸ்வீட்ஸ், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட இனிப்பான உணவுகளைச் சாப்பிடும் போது அதோடு சேர்த்தோ அல்லது அதை சாப்பிட்டு முடித்தவுடன் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடும்போது கலோரிகள் அதிகமாகி, சர்க்கரை அளவு அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றில் அசௌகரியங்களையும் ஏற்படுத்தக் கூடும்.

​சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களிலும் அமிலச்சத்துக்கள் இருக்கின்றன. வாழைப்பழத்திலும் அமிலத்தன்மையிலான சத்துக்கள் இருக்கின்றன. இந்த இரண்டுமே ஒன்றாக சேரும் வயிற்றுக்குள் போதும் அது அதீத அமிலத் தன்மையை வெளிப்படுத்தும். இதனால் நிறைய வயிறு அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

Related Posts

Leave a Comment