வேகவைத்த வேர்க்கடலை Vs வறுத்த வேர்க்கடலை.. எது பெஸ்ட்

by Lifestyle Editor

வேர்க்கடலை தென்னிந்தியாவில் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று என்று சொல்லலாம். இது சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. இதை பச்சையாகவோ, வேகவைத்தோ, வறுத்தோ, சட்னியாக, சமையலில் பல விதங்களில் பயன்படுத்துவார்கள். சாலையோரங்களில் கூட மிக எளிதாகக் கிடைக்கும் ஒரு உணவு இது. உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களையும் கொடுகக்க் கூடியது.

​வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

வேர்க்கடலையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. 100 கிராம் வேர்க்கடலையில் :

நியாசின்,
ஃபோலேட்,
தயமின்,
ரைபோஃப்ளேவின் ஆகிய பி வைட்டமின்களும்
வைட்டமின் ஈ,
உணவு நார்ச்சத்து,
பொட்டாசியம்,
கால்சியம்,
தாமிரம்,
இரும்புசசத்து,
மெக்னீசியம்,
மாங்கனீசு,
துத்தநாகம்,
செலினியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

​வறுத்த வேர்க்கடலை :

அதிக சுவையின் காரணமாக நாம் பெரும்பாலும் வறுத்த வேர்க்கடலையை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. மிதமான அளவில் எடுத்துக் கொள்ளும்போது ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவி செய்யலாம். ஆனால் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது கொலஸ்டிரால் சமநிலை இல்லாமல் போகவும் வாயப்புண்டு.

​வேகவைத்த வேர்க்கடலை எடையை குறைக்க உதவுமா?

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் வேகவைத்த வேர்க்கடலையை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

அல்லது வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவை சேர்த்து எலுமிச்சை சாறு மற்றும் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சாலட்டாக செய்து இரவு அல்லது காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் புரதம் அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் பசியை்க் கட்டு்ப்படுத்தி உங்களை முழுமையாக வைத்திருக்கச் செய்யும். இதனால் அதிக கலோரிகள் எடுப்பது தவிர்க்கப்பட்டு எடையை குறைக்கச் செய்யும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு எது சிறந்தது?

நீரிழிவு நோயாளிகள் வறுத்த, ஊறவைத்த, வேகவைத்த வேர்க்கடலையை சாப்பிடலாம். ஆனால் ஊறவைத்த மற்றம் வறுத்த வேர்க்கடலையை விடவேகவைத்த வேர்க்கடலை சிறந்தது.

இதில் கார்போஹைட்ரேட் மிக மிகக் குறைவு. சர்க்கரையும் இல்லை. அதனால் வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவி செய்யும்.

​பித்தத்தை குறைய எது சிறந்தது :

வறுத்த வேர்க்கடலையைப் பொருத்தவரையில் அதன் தோலை நீக்கி விட்டு தான் பெரும்பாலும் சாப்பிடுவோம். ஆனால் அதன் தோலில் நார்ச்சத்து மட்டுமின்றி பல்வேறு என்சைம்களும் இருக்கின்றன.

தோலில் உள்ள சில மூலக்கூறுகள் உடலில் பித்தத்தின் அளவைக் குறைக்க உதவி செய்யும். அதனால் பித்தம் அதிகமாக உள்ளவர்கள் வேகவைத்தோ அல்லது ஊறவைத்த வேர்க்கடலையோ சாப்பிடுவது நல்லது. தோலுடன் சாப்பிடும்போது வாதம், பித்தம், கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும்.

இதய நோயாளிகள் சாப்பிடலாமா?

பொதுவாக ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் வேர்க்கடலையை சாப்பிடக் கூடாது என்கிற கருத்து உண்டு.

ஆனால் இதய நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடுவது ஆரோக்கியமானது தான். குறிப்பாக வேகவைத்த வேர்க்கடலையை தினமும் ஸ்நாக்ஸாக மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யாது. ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்கும். அதனால் இதய நோயாளிகளும் கூட வாரத்தில் 3-4 நாட்கள் வேகவைத்த வேர்க்கடலையை ஒரு கைப்பிடி அளவு ஸ்நாக்ஸாக தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment