நடிகர் அஜித்தின் ‘விடா முயற்சி’ மாஸ் அப்டேட்

by Lifestyle Editor

நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகி வருகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கம் இந்த படம் அஜித்தின் 62 வது படம்.

மகிழ்திருமேனி இயக்கும் அஜித்தின் 62 வது திரைப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்ற பெயர் உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் மேல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதுதான் விடாமுயற்சி படத்தின் கதை என்று இணையத்தில் தகவல் ஒன்று கசிந்துள்ளது. விடாமுயற்சி படத்தில் அஜித், திரிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் சூட்டிங் அஸர்பைஜானில் துவங்கப்பட்டு முதல் கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து பணி மழை உள்ளிட்டவை ஏற்பட்ட நிலையில் ஷூ சூட்டிங் நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் சென்னைக்கு படக்குழுவினர் திரும்பியுள்ளனர்.

படத்தின் சூட்டிங் துவங்கி இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை அன்று வெளியாகவில்லை என்றாலும் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி ஃபர்ஸ்ட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment