68
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தத் தடை விதித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ”அரசியல் பிரசார மேடைகளில் பேசவைப்பது, முழக்கமிட வைப்பது, துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் சிறுவர்களை ஈடுபட வைக்கக் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறிப்பாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு தேர்தல் பிரசாரத்திலும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டுமெனவும், இந்த விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.