பிரான்ஸ் ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்!

by Lifestyle Editor

டெல்லியில் நாளை இடம்பெறவுள்ள குடியரசு தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நண்பகல் ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரை வந்தடையவுள்ள மேக்ரோன் அங்குள்ள நட்சத்திர விடுதியொன்றில், பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இரவு 8.50 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் மேக்ரான் நாளை டெல்லியில் இடம்பெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment