இன்றைய ராசி பலன்(09.01.24)

by Lifestyle Editor

மேஷம்

இன்று நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான ஆற்றல் மிக்க எழுச்சியை கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணை மீதான பாசம் அதிகரிக்கும் இதனால் உறவுகளுக்குள் பிணைப்பு வலுவடையும். வேலையில் இன்று நீங்கள் சவால்களை சந்திக்கலாம், ஆனாலும் உங்கள் உறுதித்தன்மை தடைகளை கடக்க உதவும். இன்று சில புதிய அனுபவங்கள் உங்களுக்க காத்திருக்கின்றன. சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ரிஷபம்

உங்களைச் சுற்றியுள்ள அழகை ரசிக்க இன்று சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் காதல் உறவு இன்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். உங்கள் துணையுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பீர்கள். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். பணியிடத்தில் உங்களது பொறுமை சோதிக்கப்படலாம், ஆனால் நீங்கள் அமைதியாக இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் எதிர்கால லட்சியங்களை அடைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் தலைமைத்திறன் முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று சிறப்பாக இருக்கும். உறவுகளுக்குகள் நல்லிணக்கம் நிலவ நேர்மையான தகவல் தொடர்பு முக்கியமானது. நீங்கள் இன்று திட்டமிட்ட பயணங்களை ஒத்தி வைக்க நேரிடும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி உங்கள் அறிவாற்றலை மேம்படுத்த முயற்சி எடுங்கள். எதிர்கால இலக்குகள் மீது இன்று உங்கள் கவனத்தை வைத்திருங்கள்.

கடகம்

இன்று உணர்ச்சிவசப்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கையில் உள்ள அன்புக்குரியவர்களுக்கு இன்று என்ன தேவை என கவனித்து அக்கறையாக இருப்பதில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளை சமாளிக்க உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள். இன்று நீங்கள் உத்வேகத்துடன் செயல்படுவது உங்கள் இலக்குகளை அடைய உதவும்.

சிம்மம்

இன்று உங்கள் வாழ்க்கை துணையின் தனித்துவத்தை பாராட்டுங்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களுக்கு நீங்கள் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை வெளிப்படுத்துங்கள். வேலையில் இருக்கும் சிரமங்களை சமாளிக்க உங்களது தன்னம்பிக்கை உதவும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

கன்னி

அன்பால் உங்கள் உறவுகளை வலுப்படுத்த வெளிப்படையாக பாசத்தை காட்டுவதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். பணியிடத்தில் உங்களின் தலைமைத்துவம் வெளிப்படும். இதனால் உங்களுக்கு புகழ் மற்றும் செல்வாக்கு கிடைக்கும். இன்று உற்சாமாகமாக இருப்பதன் மூலம் உங்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். எதிர்கால லட்சியங்களை அடைய சுயநம்பிக்கை உதவும்.

துலாம்

காதல் உறவில் இருப்பவர்கள் துணையுடன் சமாதானமாக இருக்க முயற்சி செய்யுங்கள். முக்கிய வேலைகளை முடிப்பதில் சிரமங்களை சந்திக்க நேர்ந்தாலும் உங்களது ராஜதந்திர அணுகுமுறையால் அவற்றை எளிதாக சமாளித்து விடுவீர்கள். பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்

உங்களின் உறவுக்குள் இன்று பிணைப்பை வலுப்படுத்த நீங்கள் உங்கள் மனதிற்குள் இருக்கும் உணர்ச்சிகளை துணையிடம் வெளிப்படுத்துங்கள். இன்று நீங்கள் பல தடைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், உங்கள் மன உறுதியால் அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்கள் உடலை கவனித்து கொள்ள கவனம் செலுத்துங்கள்.

தனுசு

உங்கள் சாகச மற்றும் உற்சாக உணர்வு இன்று உங்களை சிறப்பாக வழிநடத்தும். உறவுகளுக்குள் நெகிழ்வாக இருப்பது உங்களது துணையை மகிழ்விக்கும். இன்று உற்சாகமான பயணத் திட்டங்களை திட்டமிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் எதிர்கால லட்சியங்கள் பிரகாசமாக இருப்பதால் இன்று சுறுசுறுப்பாக இருங்கள்.

மகரம்

உங்கள் யதார்த்த அணுகுமுறை இன்று உங்களது இலட்சியத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும். நீங்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு உணர்வு உங்கள் காதல் உறவுகளை மேம்படுத்தும். நிலுவையில் இருக்கும் உங்கள் நீண்ட கால இலக்குகளை அடைய மற்றும் வேலைகளை முடிக்க முன்னுரிமை கொடுங்கள். உங்கள் விடாமுயற்சி இன்று உங்களுக்கு புகழை பெற்று தரும்.

கும்பம்

உங்களது உறவில் இன்று தனித்துவமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புதிய உறவை தேடுபவர்கள் உங்கள் தனித்தன்மையை மதிக்கும் துணையை தேடுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கையாள உங்கள் சிந்தனை திறன் உதவும். புதுமையான கருத்துக்களை ஆராயவும் உங்கள் அறிவை வலுப்படுத்தவும் இன்று முன்னுரிமை கொடுங்கள்.

மீனம்

சிக்கலான சூழலிலும் கூட உங்கள் உள்ளுணர்வு இன்று உங்களை சிறப்பாக வழிநடத்தும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் தேவைகளை கண்டறிந்தது அதை நிறைவேற்ற முன்னுரிமை கொடுங்கள். உங்கள் வீட்டில் அமைதியான சூழல் நிலவுமாறு பார்த்து கொள்ளுங்கள். வேலையில் சில சிரமங்கள் இருக்கலாம், ஆனால் உங்கள் பொறுமை அவற்றை சமாளிக்க உதவும். உங்கள் எதிர்கால நோக்கங்களை நீங்கள் அடைய இன்று உங்கள் செயல்திறனில் கவனம் செலுத்துங்கள்.

Related Posts

Leave a Comment