22 ஆண்டுகளுக்கு பின் படமாகி வெளியாகிறது கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்..

by Lifestyle Editor

கடந்த 22 பிப்ரவரி 2002 அன்று உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தி சென்று, குஜராத் நோக்கி வந்த பக்தர்கள் குழு, அதிகாலை நேரத்தில் தனது மரண ஓலத்தை எதிர்கொண்டது.

கோத்ரா இரயில் நிலையத்திற்கு முன்பு நிறுத்தப்பட்ட இரயிலில் வைக்கப்பட்ட தீயால் 57 பக்தர்கள் பலியாகினர். இது அன்றைய நாட்களில் இந்து – முஸ்லீம் மத பிரச்சனையாகி, மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

அயோத்தி சென்று வந்த பக்தர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தகவல் தீயாய் பரவிட, குஜராத் மாநிலமே பற்றி எரிந்தது. இதனால் மதக்கலவரம் உண்டாகி, இருதரப்பிலும் கடும் உயிர் சேதம் ஏற்பட்டன.

இன்று வரை கோத்ரா இரயில் தீ விபத்து குறித்த பல்வேறு சர்ச்சைகள் உலா வருகின்றன. அந்த சமயத்தில் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, அன்று குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில், கோத்ரா இரயில் விபத்து நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது கோத்ரா இரயில் விபத்து தொடர்பான படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் ஷோரே, மனோஜ் ஜோஷி, ஹிடு கனோடியா, டெனிஷா கும்ரா, அக்ஷிதா நாம்தேவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் மார்ச் மாதம் 01ம் தேதி 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஓஎம் திரிநேத்ரா பிலிம்ஸ் மற்றும் ஆர்ட்வர்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், எம்.கே.சிவக்ஷ் இயக்கத்தில் Accident or Conspiracy: Godhra படம் தயாராகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகவுள்ளது. முதற்கட்டமாக ஹிந்தியில் வெளியிட படக்குழு ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில், பல மொழிகளில் கிடைக்கும் வரவேற்பு பொறுத்து பிற மொழிகளிலும் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment