இன்று இரவுக்குள் காயல்பட்டினம், திருச்செந்தூரில் மின் விநியோகம் சீராகும் – அதிகாரிகள் தகவல்

by Lifestyle Editor

நாளை முதல் காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூரில் சீரான மின்சாரம் கிடைக்கும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உடுத்திய துணி தவிர மாற்று துணிகளுக்கு கூட வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது. வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைமையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாளை முதல் காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூரில் சீரான மின்சாரம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதி கனமழை, வெள்ள பாதிப்பு பகுதியான திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் பகுதியில் மின்சப்ளை கொடுக்கும் பணி தீவிரம் அடைந்து வருகிறது. மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்றி, ராட்சத கிரேன் மூலம் 150 புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் மதுரை மாவட்ட மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவுக்குள் பணி முடிந்து, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதியை சுற்றியுள்ள 30 கிராமங்களுக்கு மின்சாரம் வந்து விடும்.

Related Posts

Leave a Comment