110
தற்போது ஏராளமானோர் பிராய்லர் கோழி தான் சாப்பிட்டு வருகின்றனர் என்பதும் நாட்டுக்கோழி என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் பிராய்லர் கோழி அதிகம் சாப்பிட்டால் ஆண்களுக்கு புரோஸ்டேட் என்ற புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிராய்லர் கோழிகள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் குறிப்பாக பிராய்லர் கோழி சாப்பிடும் தீவனத்தில் ஹார்மோன்கள் அதிகம் இருப்பதால் அந்த கோழி இறைச்சிகளை சாப்பிடும் நபர்களும் உடல் எடை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது
மேலும் பிராய்லர் கோழி அதிகம் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பெண்களுக்கும் கருப்பையில் சில பிரச்சனைகள் பிராய்லர் கோழி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் என்று கூறப்படுகிறது.