பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா திரைப்படம்..

by Lifestyle Editor

தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக இராமாயணா திரைப்படம் உருவாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், ராவணன் கதாபாத்திரத்தில் கேஜிஎப் புகழ் யஷ் மற்றும் சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது‌.

இந்த திரைப்படத்தை நித்திஷ் திவாரி என்பவர் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உலக தரத்தில் உருவாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment