ஆந்திராவில் கரையை கடக்கத்தொடங்கியது மிக்ஜாம் புயல்..

by Lifestyle Editor

வங்கக் கடலில் உருவாகியிருந்த மிக்ஜாம் புயலானது தற்போது சென்னையை ஒட்டி நகர்ந்து நெல்லூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலைமையில் நெல்லூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் போது 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆந்திரபிரதேச மாநில அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையில் சென்னை கடும் மழைபொழிவை சந்தித்துள்ள நிலையில், இன்று முதல் சென்னை தப்பித்தாலும் நெல்லூர் புயலின் பிடியில் தற்போது சிக்க உள்ளது.

புயல் கடந்து சென்ற பின்னரே அதன் தாக்கங்கள் தெரியவரும் என்பதால் மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment