தேர்தல் தோல்வி : முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் சந்திரசேகர் ராவ்!

by Lifestyle Editor

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி தோல்வியை தழுவியதையடுத்து தனது முதல்வர் பதவியை சந்திரசேகர் ராவ் இராஜினாமா செய்துள்ளார்.

தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக சந்திரசேகர் ராவ், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிற்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்ததையடுத்து அவரது இராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 30 ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிட்டன. இதில் மக்களின் ஆதரவை காங்கிரஸ் பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது.

கடந்த 2014 இல் உதயமான தெலங்கானா மாநிலத்தில் 2014 மற்றும் 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment