இன்றைய ராசி பலன்(04-12-23)

by Lifestyle Editor

மேஷம்

புதிதாக் சந்திக்கும் நபர்களுடனான உரையாடல் உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைப்பதாக அமையும். உங்கள் மனம் சொல்வதை கேட்டு நடக்கவும். உடல்நலனில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்

உங்கள் காதல் கோரிக்கை ஏற்கப்படும். உங்கள் மனம் விரும்பியபடி அமைதியான உறவு ஏற்படும். கல்வி சார்ந்த விஷயங்களில் வெற்றி உறுதி. முந்துகின்ற பறவைக்குத்தான் புழு கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். உங்கள் நிதி நிலைமை சிறப்பாக அமையும்.

மிதுனம்

புதிய வாய்ப்புகளை ஏற்க தயாராக இருக்கவும். மனநிறைவான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் வேலைவாய்ப்பு புத்துணர்ச்சி தருவதாக உள்ள நிலையில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்

உங்கள் காதல் வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். நல்ல வாய்ப்பை தேர்வு செய்ய உங்கள் மனம் சொல்வதை கேட்க வேண்டும். புதிதாக பணவரவு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்..

சிம்மம்

புதிய காதல் வாய்ப்பு நெருங்கி வருகிறது. இதனால் உங்கள் வாழ்வு புத்துணர்ச்சி பெறும். உங்கள் தைரியத்தின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் செய்யும் செயல்களால் நாளின் இறுதியில் மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் நிதி இலக்குகளின் மீது கவனம் தேவை.

கன்னி

உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய நபரை சந்திப்பீர்கள். ஏற்கனவே உள்ள பந்தத்தில் கூடுதலான நேர்மை மற்றும் தெளிவான உரையாடல் தேவைப்படுகிறது. உங்கள் பணியின் மீது கவனம் செலுத்தவும்.

துலாம்

உங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல மற்றும் கெட்ட உணர்வுகள் கலந்து மேலோங்க இருக்கிறது. இதுவரையில் காதல் செய்யாதவர்களுக்கு புதிய காதல் வாய்ப்பு உண்டாகும். பணி நிமித்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

உங்கள் காதல் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். சில தடைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் நம்பிக்கையை தளரவிட வேண்டாம். இன்று பல சவால்களை எதிர்கொண்டாலும் உங்கள் விடா முயற்சி உறுதுணையாக இருக்கும்.

தனுசு

உங்கள் வாழ்வை சுற்றியிலும் நேர்மறையான ஆற்றல் சூழ்ந்துள்ளது. இதனால் காதல் உறவில் பலமான பந்தத்தை அமைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கான போட்டிகளுக்கு மத்தியில் இன்று அசுர வளர்ச்சி அடைவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும்.

மகரம்

உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நடைபெற இருக்கிறது. பெரும்பாலும் புதிய பந்தம் அமையலாம். தவறான புரிதல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு மூலமாக அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம்

தொழில்முறை மாற்றம் நடைபெற இருக்கிறது. அது உங்களுக்கு புதிய வாய்ப்பையும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். உங்கள் உடல் நலன் குறித்து சரியான பாதையை தேர்வு செய்யவும். சுற்றுலா செல்ல உகந்த நேரம் இதுவாகும்.

மீனம்

உறவுகளுக்கு மத்தியில் தவறான புரிதல்கள் ஏற்படலாம். ஆகவே வெளிப்படையான பேச்சு அவசியம். உங்கள் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் வந்தாலும், அதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகள் மற்றும் பின்னடைவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Related Posts

Leave a Comment