வெளியானது விஜய்யின் OTT ரிலீஸ் தேதி

by Lifestyle Editor

விஜய்யின் லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. Seven Screen Studio தயாரிப்பில் ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கதை ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இல்லை, நிறைய எதிர்மறை விமர்சனங்களும் வந்தது. ஆனால் படு பிரம்மாண்டமாக படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது, அதில் விஜய் பேசிய விஷயங்கள் பலவும் நிறைய பேசப்பட்டது.

படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து இப்போது OTT ரிலீஸ் குறித்து செய்தி வந்துள்ளது.

அதாவது வரும் நவம்பர் 24ம் தேதி படம் நெட்பிலிக்ஸில் வெளியாக உள்ளதாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆகிறதாம்.

Related Posts

Leave a Comment