சட்டப்பேரவை தேர்தல் – 9 மணி நிலவரப்படி சத்தீஸ்கர் 5.71%, மத்திய பிரதேசம் 11.13% வாக்குகள் பதிவு.!

by Lifestyle Editor

சத்தீஸ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 78 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், எஞ்சிய 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 2533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் இரு மாநிலங்களிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி 5.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி 11.13% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Posts

Leave a Comment