4-வது முறையாக செந்நிறமாக மாறிய புதுச்சேரி கடல்

by Lifestyle Editor

துச்சேரியில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக கடற்கரை சாலை உள்ளது. கடந்தவாரம் புதுவை கடல்பகுதியில் குருசுகுப்பத்திலிருந்து தலைமை செயலகம் வரையிலும் செந்நிறமாக கடல்நீர் மாறி காணப்பட்டது. இது புதுவை மக்களிடையே ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கடலில் கலக்கும் கால்வாய் கழிவுநீரால் நிறம் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. இதையடுத்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனமும், புதுவை மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கடல்நீரை எடுத்து ஆய்வு செய்தனர். கடல் நீர் மாதிரியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர் நச்சுத்தன்மை வாய்ந்து நுண்ணுயிரிகளின் பெருக்கம் காரணமாக கடல்நீர் நிறம் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts

Leave a Comment