நவராத்திரியில் அம்மனுக்கு 9 நாட்கள் வரை என்னென்ன பிரதாசங்கள் படைக்கலாம்…

by Lankan Editor

நவராத்திரியானது நான்கு விதமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்தியை ‘மகா நவராத்திரி (அ) சாரதா நவராத்திரி’ என்று அழைப்பர். பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்தியை ‘வசந்த நவராத்திரி’ என்று அழைப்பர். ஆனி மாதம் கொண்டாடப்படும் நவராத்தியை ‘ ஆஷாட நவராத்திரி (அ) குப்த நவராத்திரி’ என்று அழைப்பர். தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்தியை ‘சியாமளா நவராத்திரி’ என்று அழைப்பர்.

நவராத்திரி விரதம்:

நவராத்திரி விழாவன்று நவரத்திரி விரதம் இருப்பவர்கள், அந்த ஒன்பது நாட்களும் ஒரு வேலை மட்டும் உணவு சாப்பிட்டு விரத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.

பின்னர், திருமணமான பெண்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை பராசக்தியாக பாவித்துக் கொண்டு கொலுவின் அருகில் உட்கார வைத்து வணங்கி மஞ்சள், குங்குமம், நாணயம், பட்டு, தாம்புலம் கொடுக்க வேண்டும்.

நவராத்திரி தினத்தில் வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியாக, அன்பாக அனுப்புவதால், லெட்சுமியின் அருள் கிடைக்கும். தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகின்றது.

8 வது நாள் 2 – 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு வரவழைத்து அவர்களை அம்மனின் அம்சமாக கருதி பொட்டு, உணவு, வளையல், ஆடை, இனிப்பு கொடுத்து அனுப்பலாம்.

நவராத்திரி பிரசாதங்கள்:

முதல் நாள்:

சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், வெண் பொங்கல், தயிர் சாதம், மொச்சை, சர்க்கரை பொங்கல். பருப்பு வடை போன்ற உணவுகளை படைப்பார்கள்.

இரண்டாம் நாள்:

எள் பாயாசம், புளியோதரை, வேர்க்கடலை, தயிர்வடை, எள் சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.

மூன்றாம் நாள்:

காராமணி சுண்டல்,  போன்ற உணவுகளை படைப்பார்கள்.

நான்காம் நாள்:

தயிர் சாதம், பால் பாயாசம், அவல் கேசரி, கதம்ப சாதம், கற்கண்டு பொங்கல், பட்டாணி சுண்டல், உளுந்து வடை போன்ற உணவுகளை படைத்து மகிழ்வார்கள்.

ஐந்தாம் நாள்:

கடலை பருப்பு வடை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், பாயாசம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல் போன்ற உணவுகளை படைப்பார்கள்.

ஆறாம் நாள்:

தேங்காய் பால் பாயாசம், தேங்காய் சாதம், கதம்ப சாதம், பச்சைப்பயறு, ஆரஞ்சு பழம், மாதுளை போன்ற உணவுகளை படைப்பார்கள்.

ஏழாம் நாள்:

வெண் பொங்கல், பழ வகைகள், எலுமிச்சை சாதம், பாதாம் முந்திரி பாயாசம், கொண்டக்கடலை, புட்டு போன்ற உணவுகளை படைப்பார்கள்.

எட்டாம் நாள்:

புளியோதரை, தேங்காய் சாதம், பால் சாதம், மொச்சை போன்ற உணவுகளை படைப்பார்கள்.

ஒன்பதாம் நாள்:

உளுந்து வடை, வேர்க்கடலை, சர்க்கரை பொங்கல், எள் பாயாசம், பொட்டுக் கடலை, கேசரி, எள் உருண்டை போன்ற உணவுகளை படைப்பார்கள்.

Related Posts

Leave a Comment