அமெரிக்க அதிபரை கட்டியணைத்த பிரதமர் மோடி – உலக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

by Lifestyle Editor

ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 49வது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஓலா ஸ்கால்ஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தனி விமானங்கள் மூலம் வந்தனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் மட்டுமே கொண்ட இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேஷியா, தென்கொரியா, மியான்மர், குக் தீவுகள் ஆகிய நாடுகள் சிறைப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள ஹிரோஷிமா நகரில் இன்று காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ், தென்கொரிய அதிபர் யூன் சிக் இயோல், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கட்டி அனைத்து அன்பை வெளிப்படுத்தினார்.

Related Posts

Leave a Comment