10ம் வகுப்பு துணைத்தேர்வு – வரும் 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

by Lifestyle Editor

10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு ஜுன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும். மே.23ம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment