வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடந்தது மோக்கா புயல்: பெரும் சேதமா ..

by Lifestyle Editor

இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தபடியே வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே மோக்கா புயல் கரையை கடந்ததாக தகவல் வெளியாக உள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு அதன் பின் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்தது என்பதும் நேற்று இரவு மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் கரையை கடந்த போது சூரைக்காற்று வீசியதாகவும் இதனால் கனமழை பெய்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புயல் காரணமாக மியான்மரில் உள்ள ஒரு சில பகுதிகளில் வெள்ள நீரில் பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும் மீட்பு பணியினால் தயார் நிலையில் இருந்து மீட்டுப் பணிகளை செய்து வருவதாகவும் பெறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் எதிர்பார்த்தபடி பெரும் சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Posts

Leave a Comment