நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு …

by Lifestyle Editor

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வருகின்ற 7ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளும் நீட் தேர்வு எதிர்கொள்ள தயாராகியுள்ளனர். மே 7ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5:20 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வானது ஆங்கிலம், இந்தி, தமிழ் ,தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.

இந்த சூழலில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment