அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை – ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் …

by Lifestyle Editor

அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பல்வேறு புதிய வகுப்புகள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது. அத்துடன் அரசின் சீரிய முயற்சியின் காரணமாக பல்வேறு சலுகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் சூழல் தற்போது அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் சேர்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை முன்வைத்து ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பலனாக அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தற்போது ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது . இதன் மூலம் நடப்பாண்டில் மாணவர் எண்ணிக்கை என்பது அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment