தமிழகத்தில் 500ஐ விட குறைந்த கொரோனா பாதிப்பு …

by Lifestyle Editor
0 comment

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில நாட்களாக தினமும் 500க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 491 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 98 பேர்களும், செங்கல்பட்டில் 34 பேர்களும் கோவையில் 62 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6653 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 521 பேர் நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது 38064 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் பலியாகியுள்ளார் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment