இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா …

by Lifestyle Editor

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று முன் தினம் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 12,591 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment