ருத்ரன் முதல் நாளில் வசூல் ..

by Lifestyle Editor

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள படம் தான் ருத்ரன்.

திருமாறன் கதையில் கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் லாரன்ஸுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நேற்று தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன.

முதல் நாள் முடிவில் படம் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸிற்கு உள்ள தனி ரசிகர்கள் கூட்டத்தால் கண்டிப்பாக படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment