ஈஸ்டர் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி..

by Lifestyle Editor

நாடு முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் 40 நாட்களுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேது ‘சாம்பல் புதன்’ நிகழ்ச்சியுடன் தொடங்கியது.. நெற்றில் சாம்பல் பூசும் நிகழ்வுடன் தொடங்கிய 40 நாட்கள் தவக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த தவக்காலத்தின்போது, ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இந்த தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.

ஏப்ரல் முதல் தவக்காலத்தின் இறுதி வாரம் தொடங்கிய நிலையில், இந்தக்காலத்தில் சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்ட்டது. அதன்படி கடந்த ஞாயிறு அன்று, குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் 40 நாட்கள் இந்த தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6ம் தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 7 அன்று இயேசு சிலுவையில் அறையும் நாளான புனித வெள்ளியும் கொண்டாடப்பட்டது.

அன்றிலிருந்து 3வது நாளான இன்று ( ஏப் 9 – ஞாயிற்றுக்கிழமை ) இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை , திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. நள்ளிரவு முதலே தேவாலயங்களில் குவிந்த மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு வழிபட்டனர். ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.

Related Posts

Leave a Comment