தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உதயம் – சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல் …

by Lifestyle Editor

தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023-24ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனவும், அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா எனவும் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறினார். தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுசென்று, நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

Related Posts

Leave a Comment