நாளை முதல் தங்க நகைகளுக்கு HUID ஹால்மார்க் முத்திரை கட்டாயம் ..

by Lifestyle Editor

தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இனி நகைகளின் மீது HUID என்கிற 6 இலக்க எண் கட்டாயம் பதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய தர நிர்ணயம் எனப்படும் BIS அமைப்பு 1947 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நுகர்வோருக்கு பாதுகாப்பான பொருட்களை வழங்குவதற்கான நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு மின்சாதன பொருட்களுக்கான ஐஎஸ்ஐ(ISI), தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் (Halmark)குறியீடுகளை வழங்கி வருகிறது. தங்க நகைகளில் தங்கத்தின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய இந்த 916 எனப்படும் ஹால்மார்க் முத்திரை பயன்படுகிறது. தங்கத்திற்கு 2000வது ஆண்டிலும், வெள்ளிக்கு 2005 ஆண்டிலும் ஹால்மார்க் முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் HUID ஹால்மார்க் குறியீடு எண் பெற்ற நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையமான பிஐஎஸ் அறிவித்துள்ளது .

சென்னை தரமணியில் செய்தியாளர்களை சந்தித்த பிஐஎஸ் அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் பவானி, பிஐஎஸ்-இன் அங்கீகாரம் பெற்ற மையங்களில் ஒவ்வொரு நகைகளுக்கும் நகை கடை உரிமையாளர்கள் ஹால்மார்க் முத்திரையை பறிக்க வேண்டும். அந்த அடிப்படையில், தற்போது இந்தியாவில் 288 மாவட்டங்களிலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 13,341 கடைகளில் ஹால்மார்க் நடைமுறைக்கு வருகிறது. இதில் 2 கிராமுக்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு, இந்த நடைமுறை கட்டாயம் இல்லை என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 40 லட்சத்திற்கும் குறைவாக விற்பனை செய்யும் கடைகளுக்கு இது கட்டாயம் இல்லை எனவும் இந்திய தர நிர்ணய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இதனை நடைமுறைப்படுத்தாமல் விதிமீறலில் ஏற்படும் நகை கடைகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அல்லது நகையின் விலையின் 5 மடங்கு அபராதம். அல்லது கடையின் உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. HUID ஹால்மார்க் எண் பெறும் நடைமுறையின் மூலம் நகையின் தரம் விற்பனை தொடர்பான விவரங்களை நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் BISCARE APP-ல் 6 இலக்க எண்ணை பதிவிட்டு நகை யின் தரத்தையும் அறிந்து கொள்ள முடியும். லேசர் கட்டிங் முறையில் ஹால்மார்க் விவரங்களை தங்க நகைகளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment