கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் …

by Lifestyle Editor

கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பரிசோதனையை அதிகப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா அதிகரித்தாலும், பரிசோதனைகள் அதிகரிக்கப்படவில்லை. கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் கூட்டமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. ஆகவே கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ ஆக்சிஜன், உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 146 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.. இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,601 ஆக உள்ளது குறிப்பிடதக்கது.

Related Posts

Leave a Comment