259
			
				            
							                    
							        
    ஆந்திர மாநிலத்தில் திருப்பதி திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு விஐபி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு வகையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மார்ச் மாதம் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login
