முககவசம் அணிவதை கட்டாயமாக்குங்கள் – பிரதமர் மோடி அறிவுறுத்தல் ..

by Lifestyle Editor

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுடன், பொது இடங்களில் முழக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தினசரி தொற்று பாதிப்பு 1000-ஐ தாண்டியதால், கொரோனா பரவலை தடுப்பது குறித்து சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறையின் உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார். தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம், பொது சுகாதார ஏற்பாடுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை அதற்கான சிறப்பு ஆய்வகங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். மேலும், புதிய வகை கொரோனா பரவல் இருக்கிறதா என்பது குறித்து உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.. பொது இடங்களில் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்திய பிரதமர் மோடி, பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கொரோனா பரவலின் தன்மை ஆகிய ஐந்து அம்ச கொரோனா தடுப்பு முறைகளை மீண்டும் கட்டாயமாக பின்பற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 79 ஆக பதிவாகியுள்ளது. கடந்த மாதம் 21ஆம் தேதி ஒரு நாள் பாதிப்பு 9-ஆக இருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் சற்று அதிகரித்து ஒரு நாள் பாதிப்பு 79 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக கோவையில் 21 பேருக்கும், சென்னையில் 14 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 441 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றன. நேற்று 40 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருக்கிறது.

Related Posts

Leave a Comment