உலகளவில் ரூ.118 கோடி வசூல் செய்து சாதனை படைத்த தனுஷின் வாத்தி ..

by Lifestyle Editor
0 comment

தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம்வந்த வெங்கி அட்லூரி, தனுஷை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வாத்தி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கில் சார் என்ற ஆங்கில வார்த்தையோடு படம் வெளியாகி இருந்தது.

படத்தின் இசையமைப்பு பணிகளை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டு இருந்தார். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்ற நிலயில், வாத்தி உலகளவில் ரூ.118 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17 அன்றே மோகன் ஜி இயக்கத்தில், இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் என்ற படமும் வெளியாகி இருந்தது. இந்த படம் ரூ.6 கோடி பொருட்செலவில் உருவானதாக கூறப்படும் நிலையில், படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராமல் செலவு செய்ததை விட சற்று கூடுதலாக வசூலாகியுள்ளது என்ற நிலைமையில் இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment