டாடா படத்திற்கு பிறகு நடிகர் கவினின் அடுத்த படம்- அட்டகாசமாக வந்த தகவல் ..

by Lifestyle Editor
0 comment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் கவின். இவர் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

பின் பிக்பாஸில் கலந்துகொண்ட இவர் கொஞ்சம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றே கூறலாம்.

பிக்பாஸ் பிறகு டாடா என்ற படத்தில் நடித்து மக்களின் மனதை வென்றுவிட்டார், கார்த்தி, தனுஷ் என நிறைய பிரபலங்கள் டாடா படத்தில் நடித்த கவினின் நடிப்பை பாராட்டி இருந்தார்கள்.

அடுத்த படம் :

தற்போது கவினை வைத்து படங்கள் இயக்க பல இயக்குனர்கள் விருப்பம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் கவினின் அடுத்த பட இயக்குனர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது நடன இயக்குனர் சதீஷ் ஒரு புதிய படம் இயக்க அனிருத் இசையமைக்க ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறார்களாம்.

விரைவில் இப்படம் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment