விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

by Lifestyle Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில், தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று அதிகாலை மலைக்கோவிலில் நடை திறக்கப்பட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, மலையில் இருந்து வள்ளி, தெய்வானை சமேதராக புறப்பட்ட முருக பெருமான் மலையின் கீழே இறங்கி வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து, காலை 10.40 மணிக்கு தோரோட்டம் தொடங்கியது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது.

Related Posts

Leave a Comment