கேரளாவில் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்..

by Lifestyle Editor

கேரளாவில் அனைத்து பொது இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கி விட்டன. இந்தியாவில் தற்போது குறிப்பிடும்படி கொரோனா வைரஸ் பரவல் இல்லை. இருப்பினும், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, நம் நாட்டில் சிலருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு, மாநில அரசுகள் கொரோனா தடு்பபு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தியது.

இந்நிலையில், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, அந்த மாநிலத்தில் அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள மாநிலம் மீண்டும் கோவிட் பரவும் அபாயத்தில் இருப்பதால் முதல்வர் பினராயி விஜயன் அரசு கோவிட் தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கடைகள், திரையரங்குகள் மற்றும் பிற பொத இடங்களில் சானிடைசர்களை அரசு கட்டாயமாக்கியுள்ளது. கேரள அரசு பிறப்பித்த உத்தரவில், கோவிட் தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை உறுதி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment