ராஜமௌலி படத்தை பார்த்த அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கமரூன்.. கூறிய விமர்சனம் ..

by Lifestyle Editor

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌளி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் கீரவாணிக்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது.

இதற்காக படக்குழுவினர் வெளிநாடு சென்றிருந்தனர். அங்கு இயக்குனர் Steven Spielberg-ஐ கூட ராஜமௌலி சந்ததிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வெளிவந்தது.

ஜேம்ஸ் கமரூன் :

இந்நிலையில், தற்போது அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கமரூன்-னையும் இயக்குனர் ராஜமௌலி சந்தித்துள்ளார்.

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜேம்ஸ் கமரூன் பார்த்ததாகவும், படம் ஜேம்ஸ் கமரூனுக்கு மிகவும் பிடித்ததாகவும் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தன்னுடைய மனைவியையும் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்க சொல்லி சிபாரிசு செய்தாராம் ஜேம்ஸ் கமரூன். மேலும் ராஜமௌலி தான் தற்போது டாப் ஆஃப் தி வெர்ல்டு என்று ஜேம்ஸ் கமரூன் கூறியதாக ராஜமௌலி பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment