புத்தாண்டே வருக! புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க! – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !

by Lifestyle Editor

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை . அந்த வகையில் கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்ட பொறுத்த வரைக்கும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. அதற்கு முந்தை ஆண்டுகள்ல நம்ம மாநிலம் சந்தித்த வந்த நிலையை நம்ம மாத்தி காட்டினோம் . மக்கள் வாழ்வு மீண்டும் வளம்பெற தோன்றிடுச்சு. இப்போ 2023 ஆம் ஆண்டுல உங்க ஒவ்வொருத்தருடைய சமூக , பொருளாதார வளர்ச்சியும் இன்னும் அதிகரிக்கிற ஆண்டா அமைய நானும் நமது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம். எனக்கு அதுதான் முக்கியம். அதுக்காகத்தான் நான் முதலமைச்சர் பதவியை ஒரு பெரும் பொறுப்பா பார்த்து பணியாற்றி வருகிறேன். அதை எல்லாம் கடந்த ஓராண்டில் நமது அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறது.

அதையெல்லாம் பட்டியல் போட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனால் பயன்பெறக்கூடிய உங்களுக்கு அது நல்லா தெரியும். ஆட்சி பொறுப்பு வந்து அன்னைக்கே நான் சொன்னேன். எனக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்ல, வாக்களிக்க தவறியவர்களும் பாராட்டும் முதலமைச்சராக நான் செயல்படுவேன் என்று சொன்னேன். அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன். அரசு விழாவாக இருந்தாலும் , பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் மக்களாகிய உங்கள் அன்பை நான் உணர்கிறேன். நீங்கள் அளிக்கிற பாராட்டுகளை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் . அது நான் இன்னும் கவனமாக கூடுதலாக பணியாற்ற உத்வேகமாக உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக இந்தியா டுடே இதழால் தேர்வு செய்யப்பட்டேன். அதைவிட தமிழ்நாடு நம்பர் ஒன் ஆவது தான் எனக்கு பெருமை என்று சொன்னேன். அதை மனதில் வைத்து பணியாற்றுவோம் .அதற்கு பலனாக கடந்த வாரம் தமிழ்நாடு இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தகுதி பெற்றுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என்பது கல்வியில், வேலைவாய்ப்பில் ,அறிவுத்திறனில் ,தொழில் வளர்ச்சியில் அனைவருக்குமான சமூக வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக ஆவதுதான். அந்த லட்சியத்திற்காக என்னையே நான் ஒப்படைத்துக் கொண்டு செயல்படுவேன். இதற்கு தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் மனமார்ந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

சமூகநீதி மண்ணாக , மதசார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி நம்மை பிளவுபடுத்தும் சாதிய மதவாத சக்திகளுக்கு எப்போதும் இடம் அளிக்கக் கூடாது. மொழியால் , இனத்தால் தமிழர்கள் என்று உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வோம். நல்லிணக்க மாநிலமாக இருந்தால் தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு…படிப்பு…படிப்பு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உயரிய லட்சியங்கள் அடைய கனவு காண வேண்டும். அந்த கனவின் நினைவாக்க உழைக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று நீங்கள் பெருமை அடைவதுடன் , உங்கள் பெற்றோரையும் பெருமைப்படுத்த வேண்டும். நான் முதல்வன் என்ற என்னுடைய கனவு திட்டத்தின் நோக்கமே அதுதான். படிப்பை திசை திருப்பும் பழக்க வழக்கங்களில் அடிமையாக்க கூடாது. உடல் நலக்கும், மனநலத்திற்கும் கேடான போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இளைய சக்திகளின் மூலமாகத்தான் இணையற்ற மாநிலத்தை உருவாக்க முடியும். தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு ,வீடு, சம்பாத்தியம், இவை உண்டு, தான் உண்டு வாழ கூடாது சொன்னார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அனைவரும் குடும்பத்தையும் பலப்படுத்தி, சமூகவளத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொது தொண்டாற்றுவதில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது . அந்த வகையில் கடந்த ஆண்டை போலவே வருங்காலமும் வசந்தகாலமாக அமையும். புத்தாண்டு வருக! புது வாழ்வை தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க! அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ” என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment