ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் ..

by Lifestyle Editor

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் எந்த நகர்வும் இன்றி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு- தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக் கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக நகராமல், சென்னைக்கு 540 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு தெற்கு-வடக்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது; படகுகள் நிறுத்தும் இடம் வரை ராட்சத அலை வீசுவதால், மீனவர்கள் தங்கள் படகுகளை 100 மீட்டர் தூரம் வரை தள்ளி நிறுத்தி வைத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment