பத்ம பூஷன் விருது ! நெகிழும் சுந்தர் பிச்சை

by Lifestyle Editor

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதர் தரன்ஜித் சிங், சுந்தர் பிச்சைக்கு இந்த பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

2022 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது. 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நாலு பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 17 பேருக்கு பத்ம பூசன் விருதும், 117 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

பத்ம பூஷம் விருதினை நேற்று இந்திய தூதர் தரன்ஜித் சிங் சுந்தர் பிச்சையிடம் வழங்கி இருக்கிறார்.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது, வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் சான் பிரான்சிஸ்கோவில் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து, பிச்சையிடம் விருதை ஒப்படைத்து, அவரது உத்வேகம் தரும் பயணம் உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்திய திறமைகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

இது குறித்து சுந்தர் பிச்சை, பத்ம பூஷண் விருது பெறுவதும், இன்று என்னுடன் எனது குடும்பத்தினர் இருப்பதும் ஒரு பெரிய கவுரவம். இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி.

Related Posts

Leave a Comment