லவ் டுடே இதுவரை செய்துள்ள வசூல் இத்தனை கோடிகளா ..?

by Lifestyle Editor

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து கடந்த 4ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே.

விறுவிறுப்பான கதைக்களம், சலிக்காத திரைக்கதை, தேவைக்கு அதிகமான நகைச்சுவை என மிரட்டியிருந்தார் பிரதீப்.

இப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கபோடு போட்டு வரும் லவ் டுடே திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 58 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.

ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்திற்கு முன்னணி நடிகருக்கு கிடைக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment